தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

27 October, 2013

சுட்ட கதை - நான் (சுட)பட்ட கதை - திரை விமர்சனம்

குடி குடியை கெடுக்கும்,குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்.
குடி குடியை கெடுக்கும்,குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்.

குடி குடியை கெடுக்கும்,குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்.
குடி குடியை கெடுக்கும்,குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்.

படம் போட்டப இத தான் பார்த்தேன்

இது ஒன்னு மட்டும்தாங்க மனசுல நிக்குது. . . .  . . .

படம் ஆரம்மிச்ச முதல் 10 நிமிடம் மட்டும்தான் காமிடியா இருந்துச்சு  .

அப்பாடா நம்ம கொடுத்த காசு வீண்போகலை ஆரம்பமே நல்லா இருக்கே

படம் பார்த்து கொண்டே இருக்கும்போது கொஞ்சகொஞ்சமாக தலவலி

ஆரம்பித்தது.

ஒரு வேலை சாப்பாட்டுல ஃபுட் பாய்சாய்சன் எபேஃக்ட் நம்மல மெதுவா

ஆக்கிரமைக்கிதோனு பார்த்தா  அது படத்தோட எபேஃக்ட்.

படத்தில் ஆங்காங்கே ஒற்றை  குஜிலி காமிடிவெடிகள் மட்டுமே வெடிக்கிறது.

 பெரிய வயிறுடைய மனிதர் ஒருவர் தனது மகளை அழைத்து, “அப்பா பெல்ட் போட்டிருக்கேனான்னு பாரும்மா” எனக் கேட்கும் காட்சி ஓர் உதாரணம். 

என்னடா இன்னும் கதைக்கு வர மாட்டேங்கரானு நீங்க நினைச்சீங்கன்னா

சத்தியமா அதை பத்தி இங்க சொல்லவே மாட்டேன்.

வடிவேலுவை ஒரு படத்துல அதுக்கெல்லாம் நீ சரி பட்டு வரமாட்டே

அப்படீனு சொல்லி அடிப்பாங்கே .

எதுக்குடா  நான் சரி பட்டு வர மாட்டேன்னு புலம்பிட்டே போவாரு. .

 அதே  முடிவுதான் என் விமர்சனமும்.

சுட்ட கதை - அதுக்கெல்லாம் நி சரிபட்டு வரமாட்ட.

சுடுபட்டவன் சொல்லுரேன் கேட்டீங்கன்னா புழைச்சீங்க   . . . .


13 October, 2013

ராமையா வஸ்தாவையா திரை விமர்சனம்

ராமையா வஸ்தாவையா தெலுங்கு பட விமர்சனம்(Ramayya_Vasthavayya movie review)

 நம்ம ஜீனியர்  NTR  நடிச்ச படம். நமக்கு  ஜீனியர் என்.டி.ஆர்  டான்ஸ் ஆடும் ஸ்டையில்  பிடிக்கும் என்பதால் படம் பார்க்கலாம் என்  ஒரு ஈர்ப்பு.

தமிழ் நாட்டுல விஜய் எப்படியோ அது போல் தெலுங்குல NTR. நடிகரு ஸ்டெப் போட ஆரம்பிச்சு டாருனா ,சும்மா சகுட்டு மேனிக்கு போடுவாரு தாளம் மாறாமல் அப்படியொரு டான்ஸ். பாட்டு மீயுசிக்கும் இவர் ஸ்டெப்பும் கரேட்டா வரும்.

14 January, 2013

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி ?

ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube  விடியோக்களை  டவுன்லோடு செய்வது எப்படி என்பதை நாம் பார்க்க போகிறோம்.

இதற்கு உங்களிடம் தரமான  3ஜிஆண்ட்ராய்ட் வகை மொபைல் போனும் அதனுடன் இணைந்த 3ஜி இண்டர்னெட் இனைப்பும் அவசியம்.ஏனெனில் ஆண்ட்ராய்டு வகை மொபைல் போன்கள் எல்லாமே அதன் சாப்ட்வேரை மேம்படுத்த  புதிய வகை அப்பிகேசன்களை டவுன் லோடு செய்ய, புதிய கேம்களை தரவிரக்கம் செய்ய போன்ற பலவகையான பயன் பாட்டிற்கு இண்டர்னெட் இணைப்பு அவசியம்.


இப்பொது நாம் YouTube  விடியோக்களை அதன் வரிசையிலே டவுன் லோடு எளிதாக செய்ய கூடிய முறையைதான் பார்க்க போகிறோம் . அதாவது நாம் ஏதாவது காமொடி,புது பாட்டுகள்,அரிதான நிகழ்ச்சிகளை எப்படி YouTube  ல் நமது  கணக்கில்  நுழைந்து பிடித்த நிகழ்ச்சிகளை பலவற்றை தனி போல்டரில்   போட்டு சேமித்து வைத்து இருப்போம் .அதை நமது மொபைலில் டவுன் லோடு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம்.

அதே போல் தான் இந்த அப்பிளிகேசனிலும் அப்படியே  YouTube யை  அதன் வடிவத்திலே பயன் படுத்தலாம் . அதாவது விடியோக்களை பார்க்கலாம்  பிடித்து இருந்தால் அதை டவுன்லோடு செய்யலாம் அதற்கு உங்கள் லைக்ஸை பதிவு பண்ணலாம்.

இதற்கு நாம் பயன் படுத்தும் அப்பிளிகேசன்  பெயர் tubemate


இந்த அப்பிளிகேசனை டவுன்லோடு செய்யும் முறை இது டைரேட்டாக  கூகிள் பிளை ஸ்டோரில் டவுன் லோடு செய்ய முடியாது.இது வெளி மார்க்கெட்டில் இருந்து தான் டவுன் லோடு செய்ய முடியும் .அதற்கு சில மாற்றங்கள் உங்களுடைய  மொபைலில் செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் மொபைலில் MENU விற்கு சென்ற பின்  SETTING  போக வேண்டும் அடுத்து APPLICATION என்பதை கிளிக் செய்யவும் அதில் UNKNOWN SOURCES  என்பதில் டிக் செய்ய கிளிக் செய்ய வேண்டும் அதில் கன்பார்முக்கு OK செய்யவும் அவ்வளவுதான் வேலை முடிந்தது.

இப்போது INTERNET மெனுவிற்கு சென்று  GOOGLE  ஹோம் பேஜ்ஜிற்கு சென்று அதில் m.tubemate.net என்று டைப் செய்து சர்ச் செய்யவும் வரும் முடிவில் முதலில் தோன்றும்  m.tubemate.net 1.05.45 என்பதை கிளிக் செய்து போகவும் வரும் மெனுவில் download (Android Freeware) உள்ளதை கிளிக் செய்து வரும் மெனுவில் டவுன்லோடு(இன்ஸ்டால்) பண்ணவும். இப்பொழுது உங்கள் மொபைலில் டியூப்மேட் மெனு பதியப்பட்டு இருக்கும்.

இதில் உள்ள சிறப்பு நீங்கள் டவுன் லோடு  செய்ய இருக்கும் விடியோவை  அதன்  படத்தின் மேல் கிளிக் செய்தவுடன் இரண்டு மெனுவில் ஒன்று டவுன்லோடு செய்ய மற்றொன்று WATCH என்பதை கிளிக் செய்தால் விடியோவை நேரடியாகவே கண்டுகளிக்கலாம் அதவும் வேண்டிய  ரொல்வியூசன் அளவுகளில் அதாவது படத்தின் தரத்தில் பார்க்கலாம் அதே முறையிலும் டவுன்லோடு செய்யும் போதும் செயல் படுத்தலாம். உங்களுக்கு அதிக தரத்தில் விடியோ வேண்டுமானாலும் அதாவது  H.D  தர வகையிலும் பதிவிறக்கம் செய்யலாம். டவுன்லோடு செய்யும் தரத்திகற்கேற்ப  பதிவிறங்கும் கொள்ளலளவு மாறும்.

இனி உங்கள் விருப்பம் போல் டவுன் லோடு செய்து அசத்துங்கள்.
அனைத்து வாசகருக்கும், நன்பருக்கும் “ தை பொங்கல் திரு நாள் ” வாழ்த்துகள்.

இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் பின்னோட்டத்தில் தெரிய படுத்தவும்.

22 October, 2012

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி?


ஒரு ஆன்ராய்டு  மொபைல் மூலம் என்னவென்னாலும் இருந்த இடத்திலே இருந்து கொண்டு செய்யமுடியும் என்ற  நிலை வந்து கொண்டு இருக்கிறது இன்றைய நவீன தொழில் நுட்பம்.

இந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது நமது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் லேப்டாப்,டேப்லெட் பி.சி மற்றும் டேபிள் கணிணிக்கு எவ்வாறு  வைஃப்பி (wi-fi) தொடர்பு மூலம் இண்டர்னெட் இனைப்பு ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.


வேண்டிய  அமைவு முறை:

இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக  இருக்க வேண்டும் மற்றும் அதில் வைஃப்பி மூலம் இணைய இனைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.இதை அறிந்து கொள்ள உங்கள் மொபைல் நிறுவன கைடை  பார்க்கவும்.
சரி இனி இதை எவ்வாறு நிறுவுவது என்பதை பார்க்கலாம்.

step--->1 மொபைலில்setting மெனுவுக்கு போகவும்

step--->2 அடுத்து wireless and network  செல்லவும்

step--->3 அடுத்து Tethering and portable hotspot செல்லவும்

step--->4 அதில் portable wi-fi hotspot setting என்பது கானப்படும்.அதை கிளிக்  

                        செய்யவும்.
step--->5 இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும்.அதில் configure portable wi-fi 

                         hotspot என்பதை கிளிக் செய்யவும்.

step--->6 அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர்                

                         கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள்                    
                       
                         பெயரை வைத்து கொள்ளலாம்.

step--->7  அடுத்த மெனுSecurity இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை

                          யார்வேண்டுமானாலும் பயன்படுத்த open என்பைதை
                       
                          தேர்தெடுக்கலாம்.குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த

                          WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து

                           கொள்ளலாம்.பிறகு save  கொடுக்கவும்.

step--->8  மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக் 

                        செய்யவும்.இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய

                        லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற

                        சிம்பல் கானப்படும்.அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு

                        இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது.இனி

                         உங்கள் லேப்டாப்,டெஸ்க் டாப் கணிணி,டேப்லெட் பி.சி யில்

                        இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.

வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கவும்.

02 June, 2012

Samsung galaxy s3 யின் சிறப்புகள்

ஸ்மார்ட் போன்களின் போட்டி நாளுக்குநாள் விரிவடைந்து கொண்டே போகின்றது.பல பல புதிய யுத்திகளை கையாண்டு தங்களது வாடிக்கையாளருக்கு பல வசதிகளை அள்ளி வழங்கி தங்களது விற்பனை உயர்த்தி கொள்ள முயலுகின்றன.அந்த வரிசையில் தற்போது சந்தையில் அனைவரையும் எதிர்பார்த்த ஸ்மார்ட்மொபைல் சாம்சங் தயாரிப்பின் கேலக்ஸி எஸ் 3 (Samsung galaxy s3)

சாம்சங் கேலக்ஸி எஸ் 2 மொபைல் வெற்றியை தொடர்ந்து அடுத்து வந்த இந்த எஸ்3 மாடலில் தான் அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.அதை பூர்த்தி செய்யும் வண்ணம் தற்போது வெளிவந்துள்ளது.Related Posts Plugin for WordPress, Blogger...