18 December, 2011

கறுப்பு முடி, வெள்ளை முடியாக மாறுவது எதனால் ?

வயது அதிகமாக , அதிகமாக நமது முடி கறுப்பில் இருந்து
வெள்ளையாக மாறுவதற்கான காரணம் என்ன?


நம்முடைய ரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதி பொருள் சுரக்கிறது. வயது அதிகரிக்கும் போது சுரக்கப்படும் அந்த வேதி பொருலானது அதிகரிக்கும். ரோமத்திர்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கி விடுகிறது.

ரோமத்திற்கு இயற்கையாகவே நிற மூட்டுவது மெலனின் என்னும்வேதி பொருள். ரோமம், கண்கல், தோல் இவற்றின் நிறத்தினை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடை செய்துவிடுவதான் பிரச்சனையின் மூல வேர் ஆகும்
.



மனிதர்களின் ரோமகால்களின் மாதிரிகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் ரோமங்களின் சுரக்கும் ஹைட்ரஜன் பெராக்சை தண்ணீராகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் சிதைவடைய செய்யும் பணியை என்சைம்கள் செய்கின்றன.
என்சைம்கள் சுரப்பது குறைவடையும் போது ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதும் குறைந்து போகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகரிப்பதால் என்சைம் உற்பத்துயாவதும் நின்று போய் விடுகிறது. மயிர் கால்களில் மெலனின் சுரப்பத்திற்கு இந்த என்சைம்தான் காரணம்.


நன்றி !
தினமலர்-(சிறுவர்மலர்)

இரயில் பயணமா? பஸ் பயணமா?

இரயில் பயணம் செய்தால் களைப்பு ஏற்படுவதில்லை, பஸ் பயணம் செய்தால் களைப்பு
ஏற்படுகிறதே ஏன்?



பஸ் ஓடும் போது அதன் இஞ்ஜின் அதிர்வுகளும் , சாலையில் உள்ள மேடு

பள்ளங்களில் ஏறி இறங்கும் போது ஏற்படும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தி

களைப்பை அதிகரிக்கின்றன. பஸ்ஸின் வேகம் எல்லா நேரத்திலும் சீராக இருப்பது

இல்லை. வளைவுகளில் திருப்புவதாலும் நம் உடல் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்

தள்ளப்படுகிறது . தொடர்ந்து ஒரே நிலையில் இருக்க முடியாமல் போவதால் நம்

உடல் களப்படைகிறது.




இரயில் பயணம் என்றால் , அதன் இஞ்ஜின் அதிர்வதில்லை. தண்டாவாலம் ஒரே

சீராக உள்ளதால் அதில் மேடு, பள்ளங்கள் இல்லை. வண்டியின் வேகம் திடீர் என

அதிகரித்தும் , திடீர் என குறைவதும் இல்லை. வலவலப்பான தண்டாவாலத்தில் ரயில்

பெட்டிகள் எகிறி குதிக்காமல் செல்வதால் அதிக அதிர்வோ, அதிகமான ஓசையோ

ஏற்படுவதில்லை.



இதன் காரணமாக நமக்கு இரயில் பயணத்தின் போது அதிக களைப்பு

ஏற்படுவதில்லை.




நன்றி!
தினமலர்-(சிறுவர் மலர்)