தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

27 March, 2012

நீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா ? தொகுதி - 2

நாம இப்ப அடுத்த பகுதில பார்க்க போவது பல புதிய அப்பளிகேஷன் அல்லது ஏற்கனவே நீங்க கேள்வி பட்டதாக இருக்கலாம் அல்லது உபயோகப் படுத்தியிருக்கலாம் .எனக்கு தற்போது நேரம் கிடைத்தமையால் பதிவிடுகிறேன்.


1.தினமலர்:(dinamalar)
ஆண்ட்ராய்ட் மொபைலில் தின மலர்
நாம் காலையில எழுந்தவுடன் பார்க்கும் முக்கியமான விஷயம் செய்தி படிப்பது.நாட்டு நலவரத்தை கவனிப்பது அன்றாடும் வேலையாக வைத்து இருப்பது நமக்கு பொழுது போக்கு.அதை நமது மொபைலில் மூலம் பைசா செலவுயில்லாமல் பார்ப்பது நவீன உலகத்தின் வளர்ச்சி.அதை நமது ஆண்ட்ராய்டு மொபைலில் market (தற்போது play store) என்ற மெனுவில் dinamalar என சர்ச் செய்தால் வந்து விடும்.எல்லா ஊர் பதிப்பும் தனி,தனியாக பார்யிடும் வசதியும் உள்ளது.
ஆன்ராய்டு மார்கெட்டில்(பிலை ஸ்டோர்) dinakaran,maalai malar,vikatan (தினகரன்,மாலை மலர்,விகடன்) போன்ற பிற தினசரிகள் கிடைக்கின்றன.
மொபைலில் விகடன்


மொபைலில் தினகரன்


11 March, 2012

நீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா ? அதற்குறிய அப்பிளிகேசன் மற்றும் விளக்கங்கள் - தொகுதி1ஆண்ட்ராய்டு மார்கெட்டில் கூகிள் நுழைந்தது முதல் பல பல புதிய சாப்ட்வேர்களை தனது பயனாலருக்கு இலவசமாகவும்,கட்டண முறையிலும் எண்ணற்ற வகையில் வழங்கி வருகிறது.


இதில் நான் எனக்கு தெரிந்த பயன்படுத்திய சாப்ட்வேர்களையும்,அப்பிளிகேஷனைகளையும் உங்களுக்கு தெரியப் படுத்தி வருகிறேன்.இதில் ஏற்கனவே பயன்படுத்திய சாப்ட்வேர்களையும்,அப்பிளிகேஷனைகளையும் மற்றும் கேம்களை பற்றி முதலிலே பதிவுயிட்டு உள்ளேன். அதை காண இந்த எழுத்தின் மேல் கிளிக் செய்யவும்.1. whats app

இப்பதிவில் நாம் முதலில் பார்க்க போவது வாட்அப் ( whatsapp) அப்பிளிகேஷன் ஆனது பொது மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்த கூடியது.இதை உங்கள் ஆண்ட்ராய்டு போனில்”மார்கெட்(markrt)” என்ற மெனுவை கிளிக் செய்து அதில் சர்ச் பாரில் whatapp என்று டைப் செய்து தேடினால் கிடைக்கும்.இந்த அப்பிகேஷனை ஆண்ட்ராய்டு போன் மட்டும் அல்லாது நோக்கியாவின் சிம்பியான் மற்றும் இதர வகை போனிலும் நெட்டில் தேடினால் கிடைக்கும். அதை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டுயது தான்.

Whatsapp யின் முக்கியத்துவம்:

இதன் முக்கிய பயன் நீங்கள் இதற்காக தனியாக செலவு செய்ய வேண்டுயது இல்லை.இது மெயில் மூலம் அனுகுவது இல்லை.இது வணிக நிறுவனத்தில் ஈடுபட்டு இருப்பவருக்கு முக்கியமாக இருக்க வேண்டிய சாப்ட்வேர் ஆகும்.
அதாவது ஸ்பேர் பாட்ஸ் விற்கும் அல்லது வாங்கும் ஒருவருக்கு வெளியூரிலிருந்து பொருள் வாங்குபவர் இருக்க அல்லது கொடுப்பவருக்க (டீலர்) அந்த பொருளின் மாதிரியை மொபைலில் புகை படம் எடுத்து அனுப்பி சரியானதா என்று சோதித்து கொள்ளலாம்.ஏதாவது புதிய பொருள் சந்தையில் அறிமுகம் ஆகி வந்து இருந்தால் அதனை சப் டீலருக்கு புகை படம் மூலமும் , வீடியோ மூலமும் தெரிய படுத்தலாம்.
இது இரசிய தன்மை மிக்கதாக உள்ளது.ஏனெனில் இது உங்கள் போன் மூலம் மட்டும் நடைபெற கூடிய நடவடிக்கையாகும்.இதில் மூலம் நீங்கள் சாட் செய்யலாம். மேல் சொன்ன எல்லா பயன் பாட்டிற்கும் இன்டர்னெட் இணைப்பு அவசியம்.
தேவையான சமயத்தில் உடனடியாக கால் call செய்து பேசலாம்

உபயோகிக்கும் முறை:


நீங்களும் உங்கள் நண்பரும் ஸ்மார்போன் வைத்துஇருப்பது முக்கியம். அதில் மேற்கூறிய அப்பிளிகேஷனை உங்கள் இருவர் மொபைலில் பதிந்து இருக்க வேண்டும்.அப்போது தான் நடவடிக்கை பயன்களை மேற்கொள்ள முடியும்.
உங்கள் இருவர் போனிலும் அடுத்தவரின் மொபைல் நம்பரை சேமித்து (பதிந்து) இருக்க வேண்டும்.இன்டர்நெட் இணைப்பு தொடர்ந்து இருப்பது அவசியம்.


அப்பிளிகேஷனை நிறுவிய பின் அதன்னுள் நுழைந்து கேட்கும் விவரங்களை தந்து உறுதி படுத்தி கொள்ளவும்.பின் நுழைந்தவுடன் உங்கள் நன்பர் அல்லது வணிக நிறுவனமும் இந்த அப்பிளிகேஷனை இன்ஸ்டால் செய்து இருந்தால் அவர்களின் பெயருடன் அப்டேட் செய்ய பட்டு காட்சியளிக்கும்.அதில் யாருடன் தொடர்பு கொள்ள நினைக்கிறொமோ அவர்களை கிளிக் செய்து சாட் செய்யலாம் புகைபடங்களை எடுத்து அனுப்பலாம்,விடியோவை அனுப்பலாம்.உங்கள் மெசெஜ் கிடக்க பெற்றால் பதில் அனுப்புவார்கள்.அவர்கள் சில மணி நேரம் கழித்து பதில் அனுப்பி இருந்தால் எப்போது அனுப்பினார்களோ அப்போதே கிடைக்கும்.அது தனி மெசெஜ்ஜாக டிஸ்பிளேயில் காட்சியளிக்கும்.


வீடியோ இணைப்பு கிளிக் செய்க

பயன்படுத்தி பார்த்து பின்னொட்டம் இடுங்கள்.நன்றி ! !
.

05 March, 2012

பழைய காரை விற்கும் போது கவனிக்க . . . . . .
கார் வாங்கும் நபரை போலவே , காரை விற்பவரும் காரின் ஆர்.சி புத்தகத்தில் பெயரை மாற்றுவதில் மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு விற்பவரும்,வாங்குபரும் ஒருவருக்கொருவர் காரை ஒப்படைத்த நேரம்,தேதி ஆகியவற்றைக் (படிவம் -29-ன் படி) குறிப்பிட்டு,அத்தாச்சி கடிதங்களை பரிமாறி கொள்ள வேண்டும்.அப்போதுதான் அந்த காரில் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடந்தால், காரை விற்பனை செய்தவர் வேண்டாத சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும் !


ஃபாம் டவுன் லோடு செய்ய இதில் கிளிக் செய்க

.

பைக்கை ரீ-மாடிஃபிகேசஷன் செய்யலாமா ? வண்டி கலரை மாத்தலாமா ? ?சில பேருக்கு புதிய பைக்கு வாங்க வேண்டுமென்று ஆசை இருக்கும்.

ஆன பஜ்ஜெட் இருக்காது.சில பேருக்கு பழைய பைக்க வாங்கி தங்கள் இஷ்டம் போல் சிறு

சிறு மாற்றங்கள் செய்து ப்யன் படுத்துவார்கள் .அதிலே இன்னும் பெரிய ஜாம்பவான்கள்

ரூபாய்10,000/- க்கு பைக்க வாங்கி சுமார் 50,000/- ,70,000/- செலவு

செய்யும்ஆசாமிகளையும் நாம் கண்டதுண்டு இப்படி செலவு செய்பவர்கள் முறையாக அரசு

கட்டு பாட்டுகளை,நடைமுறைகளை கடைபிடிக்க படுகிறத, அந்த வாகனம் எல்லாவற்றுக்கும்

உட்படுத படுகிறதா என்றால் இல்லைதான்னு சொல்லனும்.


சரி விஷயத்திற்கு வருவோம்.

வாகனங்களின் நீள, அகலத்தை மாற்றி,பொது மக்கள் பயன் படுத்தும் சாலையில் ஓட்டுவது

சட்ட படி தவறு.அதாவது,தயாரிப்பாளர் வாகனத்தின் நீளம்,அகலம்,மற்றும்

வடிவமைப்பினை புனேயில் உள்ள

“ஆட்டோமேட்டிவ் ரிசர்ச் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா”வில்

சமர்பித்து , அதன் அடிப்படையில்தான்

சான்றிதழ் பெறுகிறார்.அது பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு வழங்கப்படுகிறது.

வாகனத்தின் நிறத்தை மாற்றுவதாக இருந்தாலும்,இன்ஜின் மற்றும் சேஸியை மாற்றுவதாக

இருந்தாலும் மாற்றப்பட்ட இன்ஜின் மற்றும் சேஸி நம்பரை மீண்டும் பதிவு செய்ய

வேண்டும்.வீல்பேஸ்,இன்ஜின் திறன் அதாவது சி,சி திறன்,சிலிண்டர்,எரி பொருள்,

சக்தி,எடை என எதை மாற்றுவதாக இருந்தாலும் அதை ஆர்.டி.ஓ (R.T.O) அலுவகத்திற்கு

சென்று ஆர்.சி (R.C) புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.இது இன்ஷீரன்ஸீக்கும் உதவியாகஇருக்கும் !
.
Related Posts Plugin for WordPress, Blogger...