தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

14 August, 2011

ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்


கூகிள் ஆன்ட்ராய்டு மொபைல் தனது பயனாளருக்கு, பல அரிய வகை சாப்ட்வேர்களை இலவசமாக தனது வாடிக்கையாளருக்கு அள்ளி வழங்குகிறது.கூகுள் தனது இலவச கட்டமைப்பு தொகுப்பை (o.s) ஒவ்வெரு படி நிலையிலும் மேம்படுத்தும் போதும் பல எளிய பயன் தொகுப்புகளையும் சேர்த்து வெளியிடுகிறது.பல்வேறு வசதியினை கொட்டி வழங்கினாலும் தமிழ்மொழியில் உள்ள இணையதளங்களை காணுவதற்கான வசதியினை கொடுப்பது இல்லை.இது பல பயனாளருக்கு வருத்ததை தருவதாக உள்ளது.
ஆன்ட்ராய்டு மொபைலில் அதனுடன் இருக்கும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில்
நாம் opera browser  என்று சர்ச் செய்தால் லேட்டஸ் ஆப்ர தொகுப்பான 9.1/12.1 தான் கிடைக்கும்.இதில் தமிழ் மொழி கிடைப்பதற்கு மாற்றம் செய்வது கஷ்டம்.

இருந்தாலும், நமக்கு எப்போதும் உற்றதோழனாக இருப்பது நமதுஆப்ர மினிவெப்பிரவுசர்தான் .  

இதை நமது மொபைலில் செயல்படுத்துவதற்கான வழிமுறை:

முதலில் உங்கள் மொபைலில் நார்மல் வெப்பிரவுசரை திறந்து கொள்ளுங்கள்.
பின் கூகிள் வெப் சர்ச்சில் Opera mini 6.1என்று டைப்செய்துஆப்ரா தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.(ஆப்ரா மொபைல் 6.1 ஆன்ட்ராய்டு  வெர்சனை டவுன்லோடு) செய்யுங்கள் .

அப்போது இதை டவுன்லோடு செய்யும்போது எச்சரிக்கை
மொபைல் மெனு வரும் அதில்  unknown soueces(allow installation of non-market application) என்பதில் டிக் செய்யவும்.மீண்டும் பதிவுயிறக்க தொடங்குங்கள்.
இன்ஸ்டால் செய்த பிறகு
1. opera mini browser – ஓபன் செய்யவும்
2. அட்ரஸ் பாரில் opera:config என்று மட்டும் டைப் செய்து .கே கொடுக்கவும்.
 (http://www என்று டிஃபால்ட்டாக தெரியும் எழுத்துக்களை நீக்கி விட வேண்டும்)
3. வரும்பவர் யூஸர் செட்டிங்ஸ்” power-user setting பக்கத்தில் use bitmap fonts for complex scripts என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். (படத்தை பார்க்கவும்!)
4. பிறகு opera mini – யை restart செய்யவும். இனி எல்லா தமிழ் இணையதளங்களையும் நீங்கள் உங்கள் மொபைலில் வாசிக்கலாம்.

இந்த பதிவு பிடித்துஇருந்தால்உங்கள் கருத்து தெரிவிக்கவும், மற்றும் இன்ட்லில் ஓட்டு போடவும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

 1. உங்கள் தகவலுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 2. symbian, RIM, iOS, Windows
  அ​னைத்து Mobile OS களுக்கும் இந்த வழிமு​றைதான்.

  ReplyDelete
 3. என்னுடைய நண்பரொருவர் ஒரு வாரத்திற்கு முன்பு சாம்சங் கேலக்சி பாப் மொபைல் வாங்கினார் இதிலும் நீங்கள் கூறிய operamini browser பயன் தருமா? ஏனென்றால் நண்பர் பயன் படுத்தும் மற்றொரு பிரவுசரில் தமிழ் எழுத்துக்கள் தெரிகின்றன ஆனால் புள்ளி வைக்கப்பட்ட எழுத்துக்கள் சீராக தெரிவதில்லை இதனால் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
  உங்களுடைய தகவல் எங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. என்னுடைய நண்பரொருவர் ஒரு வாரத்திற்கு முன்பு சாம்சங் கேலக்சி பாப் மொபைல் வாங்கினார் இதிலும் நீங்கள் கூறிய operamini browser பயன் தருமா? ஏனென்றால் நண்பர் பயன் படுத்தும் மற்றொரு பிரவுசரில் தமிழ் எழுத்துக்கள் தெரிகின்றன ஆனால் புள்ளி வைக்கப்பட்ட எழுத்துக்கள் சீராக தெரிவதில்லை இதனால் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
  உங்களுடைய தகவல் எங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.


  நண்பர் இளவரசு அவர்களே கண்டிப்பாக மேல் சொன்ன முறையை பின்பற்றினால் எழுத்து கோர்வையாக தெரியும்.வேரு ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் மெயிலில் தெரிவிக்கவும்.

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல்... தொடர்ந்து எழுதுங்கள்...

  ReplyDelete
 6. Dear Sir, how can one send & read emails in Thamizh using Android?
  Continue your good work.

  ReplyDelete
 7. hai brother this very use full,,,,,, keep it up.........

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...