தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

02 August, 2011

நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !நீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களை சந்தித்து

 இருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்

 உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .

 உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது

உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை;
(முதலில் போன பணம்போனது தான் ! )


 வழிமுறை 1

 உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும்

 MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து, கீல்

 இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .

 பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .

 அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply

 செய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்

 நீக்கப்படும்.வழிமுறை 2

 ’STOP’’என்று type செய்து 121 க்கு மெசெஜ் அனுப்பவும்.

 பின்பு 121 லிருந்து பதில் மெசெஜ்யில் எந்தெந்தஎக்ஷ்ரா சர்வீஸ் உள்ளது

 என காட்டும் ,தேவையில்லாத சர்வீசைஉரிய எண்ணை தெர்ந்தெடுத்து
  
  பதில் மெசெஜ் அனுப்ப சேவை நிறுத்தப்படும்.


மொபைல் மெயின் பேலன்ஸ் பார்க்க;

உங்கள் மொபைலில் *123# டயல் செய்க


 மொபைல் இன்டர்னெட் பேலன்ஸ் பார்க்க (2G);

 உங்கள் மொபைலில்*123*10# டயல் செய்க


 மொபைல் ரீசார்ஜ் ப்பர்பார்க்க;

உங்கள் மொபைலில்*121*11# அல்லது 121312.


 வாடிக்கையாளர்சேவை (கஸ்டமர்கேர்) நம்பர் ;

 198டயல் செய்க.


 கடைசி 5 பரிவர்தனைக்கு எடுத்த தொகை அறிய;

நமது மொபைலில் லம்ப லவட்டி இருந்தார்கள் எனில் அதனை அறிய,

 உங்கள் மொபைலில் ‘’LAST’’ என்று டைப் செய்து 121 க்கு மெசெஜ் அனுப்ப

 பதில் சில நிமிடங்களில் வரும்.


தேவையில்லாமல்(RingTone,Hello Tone,Ringback

 Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala service)
போன்ற

 உங்கள்மொபைலில்இருந்துபணம்எடுக்காமல்

 இருக்கவழிமுறைகள் ;

முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் மெயின் பேலன்ஸ் முழுவதையும்

 பேசி, காலி பன்னி தீர்த்து விடுங்கள். பின் ரீசார்ஜ்கடையில்RC111 அல்லது

நிபந்தனையுள்ளகாலவரையில்மட்டும்(30days,20day,7day)பேச

கூடிய மதிப்பிற்குரியவகையில் ரீசார்ஜ் செய்யவும். இது தனிகணக்கில்

 வரவு வைக்க படும்.இதில் இருந்துநீங்கள் பேசு வதற்கும், SMS

 அனுப்புவதற்கும் மட்டுமே இதில் பணம் கழிக்க படும்.

தேவையில்லாத வேற எந்த சர்வீஸ் பயன்பாட்டிற்கும் இதில் இருந்து

அவர்களால் பணம் பிடுங்க முடியாது.


பின்குறிப்பு:

 இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் உங்கள் மெயின் கணக்கில் போதிய

பேலன்ஸ் இல்லாத காரணத்தால் தினம், தினம் செய்யும்முதல் அழைப்புக்கு

 தேய்ந்து போன பழைய குரல் ஒன்று மெயின் கணக்கை ரீசார்ச் செய்யுமாறு

கழுத்தருக்கும் .பின் அடுத்த காலுக்கு தடையில்லாமல் போகும்.


 மிக முக்கிய குறிப்பு:

இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் அவசர தேவைக்கு

 அல்லது) சந்தேகத்திற்கு விளக்கம் கேக்க AIRTEL வாடிக்கையாளர்

சேவைக்கு பிரிவுக்கு அழைப்பு விடுத்தால் பேச முடியாது.

ஏனெனில் வாடிக்கையாளர் பகுதிக்கு காசு வசூல் செய்து கல்லா கட்டுகிறது

 AIRTEL.அவர்களின் தொழில் திறமைகளை வளர்த்துகொள்ள நம்மிடம் பிச்சை

 எடுக்க வேண்டிய அவலநிலை INDIA’S NO1 AIRTEL நிறுவனத்திற்கு.

 இதனால் மெயின் பேலன்ஸ்ஸில் ரூபாய் 5 தாவது வைத்துகொள்ளுங்கள்

 தர்மம் இட.


 கொள்ளை அடித்த () திருடிய பணத்தை மீற்க

வழிமுறை:


உங்கள் ஆதரவு இல்லாமல் ஏதாவது ஒரு சர்வீஸ் மூலம்(RingTone,Hello
Tone,Ringback Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala Service)

 உண்மையாக,உங்கள் அனுமதியில்லாமல் பணம் திருடியிருந்தால்

 வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு அழைப்பு விடுத்து உங்கள் பிரச்சினை

 குறித்து கூறுங்கள்.


முன்குறிப்பு:

வெடிகுண்டு முருகேசன் ‘’ படத்தில் வரும் வடிவேல் போல் முறையா ,

 நல்லா முறையா என்ற பாணியில் சேவை பிரிவில் பேசுவது

 முதல்,முடியும் வரை சினம் (கோபம்) கொண்டேபேசுங்கள் .தேவைக்குயேப்ப

 சவுண்டு வால்யூம் ஏற்றி, இறக்கி கொள்வதுமுக்கியம்.இதற்க்கு முன்

 இதுபோல் மொபைலில் இருந்து திருடப்பட்ட ஹிஸ்டரியை(உதாரணத்தை)

 கூறியும் இபொழுது தேவையில்லாமல் எடுத்த பேலன்ஸ் தொகையும் கூறி

சவுண்டு விடுங்கள். உடனே எடுத்தபணத்தை மெயின் கணக்கில்

சேர்க்கும்மாரு உறுதியுடன் கேளுங்கள். முடிந்தால் அவர்களின்உயர்

அதிகாரிக்கு இணைப்பு ஏற்படுத சொல்லி அதே முனைப்புடன் வாதாடி

 பணத்தை திரும்ப பொறுங்கள்.
இதற்கு உங்கள் போச்சு திறமை மிக,மிக,மிக அவசியம். நான் இதுபோல்

உண்மையாக திருடப்பட்ட எனது பணத்தை சில முறை மீட்டு இருக்கிறேன்.


 இந்த பதிவு உங்களுக்கு பயன் அளித்து இருந்தால்

பின்னோட்டம்,இன்ட்லியில் ஓட்டு இடவும்.இது என்
எழுத்து நடையை மெருகேற்ற உதவும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

18 comments:

 1. இத்தனை வம்பு வழக்கெல்லாம் எதுக்குங்க? ஏர்டெல்லை விட்டு வேறு கம்பெனிக்கு போய்விடலாமே?

  ReplyDelete
 2. நீங்கள் ​​செல்​பேசி க​டைக்காரர் என நி​னைக்கி​றேன்.

  ReplyDelete
 3. //ஏர்டெல்லை விட்டு வேறு கம்பெனிக்கு போய்விடலாமே? //

  அனுபவித்து வேறு கம்பெனிக்கு மாறியே விட்டேன்
  நன்றி : mobile number portability option

  நட்புடன்
  சம்பத்

  ReplyDelete
 4. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே!எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வந்து போங்கள்.பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

  ReplyDelete
 5. dear friend thank you very much thank you, thank you

  ReplyDelete
 6. என் பெயரில் 3 ஏர்டெல் இணைப்புகள் எடுத்து எனக்கு ஒன்று என் தாயாருக்கு ஒன்று, தந்தயாருக்கு ஒன்று என்று பயன்படுத்தி வந்தோம். 2010 பிப்ரவரி மாதம் என் தாயார் பயன்படுத்திய எண்ணுக்கு 760 ரூபாய் பில் வந்தது. மூன்று எண்களுக்கும் சேர்த்து 1800 ரூபாய். என் தந்தை தாம்பரத்தில் சென்று பணம் கட்டிவிட்டு தனித்தனியான ரசீதுகளுடன் வந்தார். அடுத்தமாதம் என் தாயார் பயன்படுத்தும் நம்பருக்கு 1280 ரூபாய் பில் என்று வந்தது. விவரம் பார்த்தால் பிப்ரவரி மாதப் பணம் கட்டவில்லை என்றனர். கட்டிய ரசீதின் நகலைக் கொண்டு போய் காட்டியதும் "செக் பண்றோம்" என்றனர். மறுபடியும் அழைத்து நீங்கள் பில் கட்டவில்லை என்றனர். ரசீது பற்றிச் சொன்னதும் "எங்க சிஸ்டம்ல அப்டேட் ஆகலை சார். பணம் கட்ட்லைன்னா இணைப்பை துண்டிப்போம் என்றனர்." நோடல் ஆபீசர் வரை பேசியதும் வழக்கம் போல "செக் பண்றோம்" என்றனர். 1 வருடம் இழுத்தடித்து 36 பேர் பேசி "I'll do my best to resolve this,Sir." என்று சொல்லி ஒரு தீர்வும் இல்லாமல் ஏர்டெல் வேண்டாம் என்று துண்டிப்புக்கு எழுதிக் கொடுத்ததும் 6 பேர் பேசினர். இணைப்பைத் துண்டிக்காதீர்கள். 6 ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறீர்களே.. நீங்கள் மதிப்புக்குரிய வாடிக்கையாளர்" என்றெல்லாம் சொன்னார்கள். நான் கட்டிய பணம் என்னவானது என்றால் பதில் இல்லை. இறுதியில் ஏர்டெல்லை விட்டுவிட்டு வேறு கனெக்ஷன் வைத்திருக்கிறோம். இப்போது நிம்மதியாக இருக்கிறது.

  ReplyDelete
 7. Docomo & bsnl my choiceDocomo & bsnl my choice

  ReplyDelete
 8. பயனுள்ள பதிவு

  ReplyDelete
 9. உண்மையிலேயே ரொம்ப படுத்தி எடுக்கிறார்கள் நண்பா. நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல நிறையவே.வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொள்வது என்பது திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை பார்ப்பதுபோல் இருக்கிறது. அவஸ்தை. நான் நான்கு ஆண்டுகளாக ஏர்டெல் வாடிக்கையாளராக இருக்கிறேன். எல்லாரும் 1 வினாடிக்கு 1 பைசா எடுத்தா இவிய்ங்க மட்டும் 1.2 பைசா எடுக்குறாய்ங்க என்ன கருமமோ.நீங்கள் கூறுவதுபோல பிச்சைதான் எடுக்குறாய்ங்க. இந்த தொல்லை வேறனா பத்தாதுக்கு டாப் அப் , ரீசார்ஜ் கார்டு விற்கின்ற ரீடெய்லர்கள் 1 ரூபாய் சேர்த்து வாங்குறாய்ங்க. உதாரணமா 30 ரூபாய் கார்டுக்கு 31 ரூபாய் கொடுத்து வாங்கி 30 ரூபாய்க்கு உண்டான மதிப்பினை பெறுகிறோம்.. எந்தளவுக்கு கேனப்பயலாக்குறாய்ங்க. இதை கிராமத்தில் இருக்கும் கடைக்காரர் செய்தால் பரவாயில்லை பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலும் முக்கியமான இடங்களிலும் இதுதான் நிலைமை.

  ReplyDelete
 10. பயனுள்ள தகவல் தோழரே......

  ReplyDelete
 11. நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்து இன்னும் அதிகம் சம்பாதிக்கலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

  ReplyDelete
 12. my best choice docomo ... very nice service . with internet help support . gprs symtem jappon technology

  ReplyDelete
 13. பயனுள்ள தகவல்... அப்படியே மற்ற நெட்வொர்க் தகவலையும் எழுதினால் நன்றாக இருக்கும்...

  ReplyDelete
 14. போங்க பாஸ்......விட்டுவிட்டு வேற நெட்வொர்க் போக லாமே

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...