
ஆண்ட்ராய்டு மார்கெட்டில் கூகிள் நுழைந்தது முதல் பல பல புதிய சாப்ட்வேர்களை தனது பயனாலருக்கு இலவசமாகவும்,கட்டண முறையிலும் எண்ணற்ற வகையில் வழங்கி வருகிறது.
இதில் நான் எனக்கு தெரிந்த பயன்படுத்திய சாப்ட்வேர்களையும்,அப்பிளிகேஷனைகளையும் உங்களுக்கு தெரியப் படுத்தி வருகிறேன்.இதில் ஏற்கனவே பயன்படுத்திய சாப்ட்வேர்களையும்,அப்பிளிகேஷனைகளையும் மற்றும் கேம்களை பற்றி முதலிலே பதிவுயிட்டு உள்ளேன். அதை காண இந்த எழுத்தின் மேல் கிளிக் செய்யவும்.

1. whats app
இப்பதிவில் நாம் முதலில் பார்க்க போவது வாட்அப் ( whatsapp) அப்பிளிகேஷன் ஆனது பொது மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்த கூடியது.இதை உங்கள் ஆண்ட்ராய்டு போனில்”மார்கெட்(markrt)” என்ற மெனுவை கிளிக் செய்து அதில் சர்ச் பாரில் whatapp என்று டைப் செய்து தேடினால் கிடைக்கும்.இந்த அப்பிகேஷனை ஆண்ட்ராய்டு போன் மட்டும் அல்லாது நோக்கியாவின் சிம்பியான் மற்றும் இதர வகை போனிலும் நெட்டில் தேடினால் கிடைக்கும். அதை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டுயது தான்.

Whatsapp யின் முக்கியத்துவம்:
இதன் முக்கிய பயன் நீங்கள் இதற்காக தனியாக செலவு செய்ய வேண்டுயது இல்லை.இது மெயில் மூலம் அனுகுவது இல்லை.இது வணிக நிறுவனத்தில் ஈடுபட்டு இருப்பவருக்கு முக்கியமாக இருக்க வேண்டிய சாப்ட்வேர் ஆகும்.
அதாவது ஸ்பேர் பாட்ஸ் விற்கும் அல்லது வாங்கும் ஒருவருக்கு வெளியூரிலிருந்து பொருள் வாங்குபவர் இருக்க அல்லது கொடுப்பவருக்க (டீலர்) அந்த பொருளின் மாதிரியை மொபைலில் புகை படம் எடுத்து அனுப்பி சரியானதா என்று சோதித்து கொள்ளலாம்.

ஏதாவது புதிய பொருள் சந்தையில் அறிமுகம் ஆகி வந்து இருந்தால் அதனை சப் டீலருக்கு புகை படம் மூலமும் , வீடியோ மூலமும் தெரிய படுத்தலாம்.
இது இரசிய தன்மை மிக்கதாக உள்ளது.ஏனெனில் இது உங்கள் போன் மூலம் மட்டும் நடைபெற கூடிய நடவடிக்கையாகும்.இதில் மூலம் நீங்கள் சாட் செய்யலாம். மேல் சொன்ன எல்லா பயன் பாட்டிற்கும் இன்டர்னெட் இணைப்பு அவசியம்.
தேவையான சமயத்தில் உடனடியாக கால் call செய்து பேசலாம்
உபயோகிக்கும் முறை:
நீங்களும் உங்கள் நண்பரும் ஸ்மார்போன் வைத்துஇருப்பது முக்கியம். அதில் மேற்கூறிய அப்பிளிகேஷனை உங்கள் இருவர் மொபைலில் பதிந்து இருக்க வேண்டும்.அப்போது தான் நடவடிக்கை பயன்களை மேற்கொள்ள முடியும்.
உங்கள் இருவர் போனிலும் அடுத்தவரின் மொபைல் நம்பரை சேமித்து (பதிந்து) இருக்க வேண்டும்.இன்டர்நெட் இணைப்பு தொடர்ந்து இருப்பது அவசியம்.

அப்பிளிகேஷனை நிறுவிய பின் அதன்னுள் நுழைந்து கேட்கும் விவரங்களை தந்து உறுதி படுத்தி கொள்ளவும்.பின் நுழைந்தவுடன் உங்கள் நன்பர் அல்லது வணிக நிறுவனமும் இந்த அப்பிளிகேஷனை இன்ஸ்டால் செய்து இருந்தால் அவர்களின் பெயருடன் அப்டேட் செய்ய பட்டு காட்சியளிக்கும்.அதில் யாருடன் தொடர்பு கொள்ள நினைக்கிறொமோ அவர்களை கிளிக் செய்து சாட் செய்யலாம் புகைபடங்களை எடுத்து அனுப்பலாம்,விடியோவை அனுப்பலாம்.உங்கள் மெசெஜ் கிடக்க பெற்றால் பதில் அனுப்புவார்கள்.அவர்கள் சில மணி நேரம் கழித்து பதில் அனுப்பி இருந்தால் எப்போது அனுப்பினார்களோ அப்போதே கிடைக்கும்.அது தனி மெசெஜ்ஜாக டிஸ்பிளேயில் காட்சியளிக்கும்.

வீடியோ இணைப்பு கிளிக் செய்க
பயன்படுத்தி பார்த்து பின்னொட்டம் இடுங்கள்.நன்றி ! !
.
ஆன்ட்ராய்டு பயன்படுத்துகிறவர்களுக்கு தேவையான
ReplyDeleteமென்பொருள்கள் நன்றி
தங்கள் வருகைக்கு நன்றி ! சார்
Deleteநல்ல பகிர்வு நன்றி பாஸ்
ReplyDeleteசார் நீங்கள் பிளாக் வைத்திருப்பது இப்போதுதான் பார்த்தேன் மிகவும் பயனுள்ள பதிவுகள் உங்களுடையது தொடர்ந்து பதிவிடுங்கள் .நன்றி
ReplyDeleteபொய்யாமொழி அன்னே தங்கள் வருகைக்கு நன்றி .மேலும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Delete