ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்
உலகில் வளர்ந்து வரும் மொபைல் மார்கெட்டிங் துறையில் கூகுள் ஆண்ட்ராய்டு o.s தனக்கென ஒரு இடத்தையே உருவாக்கி கொண்டு(உள்ளது)வருகிறது.
இதன் எளிமையான மார்கெட்டிங் தந்திரம் அனைத்து பிற மொபைல் மார்கெட்டினை வீழ்த்தி முன்னேறி வருகிறது.
அதாவது , மைக்ரோ சாப்டின் விண்டோஸ் மொபைல்,நோக்கியாவின் சிம்பியான் மொபைல்,பிளாக் பெர்ரி மொபைல்,ரிம் மொபைல்,ஆப்பிளின் ஐபோன் மற்றும் வெப் (ஓஸ்) ஆகியவை.
மற்ற இயங்கு தள அமைப்புகள் அதன் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப் பட்டு அவர்களின் சொந்த நிறுவன மொபைல்க்கே மட்டுமே பயன் படுத்திகொள்ளுகின்றன.ஆனால் நமது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் இயங்குதளமானது பொது விநியோக முறையில் யார்வேண்டுமானலும் அதன் இயங்கு தளத்தினை தங்களது மொபைலில் நிறுவி வெளியீடு செய்யலாம்.இது ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும்.
மற்ற இயங்குதள மொபைல் வேண்டுமெனில் அதிக பணம் செலவழிக்க வேண்டும்.
உதாரணமாக;
பிளாக் பெர்ரி மொபைல் இயங்குதளம் கொண்ட போனை வாங்க ஆரம்ப தொகை ரூபாய் 16,000/-
ஆப்பிள் ஐ போனை வாங்க ஆரம்ப தொகை ரூபாய் 35,000/-
நோக்கியாவின் சிம்பியான் மாடல் போனின் ஆரம்ப தொகை ரூபாய் 10,000/-
விண்டோஸ் வகை போனின் ஆரம்ப தொகை ரூபாய் 18,000/-
இவையெல்லாம் அந்தந்த வகை இயங்குதளத்தினை அடிப்படை கொண்ட(smart phone) ஸ்மார்ட் போன்களின் ஆரம்ப விலையாகும்.
ஆனால் கூகுளின் ஆன்ராய்ட்டு மொபைலின் ஆரம்ப விலை சுமார் ரூபாய் 7,000/- லிருந்து கிடைக்கிறது.
மேலும் உலக அளவில் உள்ள சாப்ட்வேர் தயாரிப்பாளர்கள் ஆன்ராய்டு மொபைலுக்கென பல இலட்சம் சாப்ட்வேர்களை இலவசமாவும்,கட்டண மென்பொருளாகவும் வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள். இது வரை தோராயமாக சுமார் 2,00,0000/-(இரண்டு இலட்சம்) மேலான சாப்ட் வேர் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. ஆம் இது எண்ணில் அடங்கா வண்ணம் உள்ளது.
சரி, இனி ஆன்ராய்டு மொபைலில் டச் (touch phone)- உள்ள சிறப்பு மிகு அப்பிளிகெசன் (appliction) என்னென்ன உள்ளது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
(இவையெல்லாம் என் சொந்த முயர்ச்சியில் மற்றும் அனுபவத்தின் வாயிலாக ஆராய்ந்தே வழங்குகிறேன். தாராளமாக நீங்கள் செயல் படுத்தி பார்க்கலாம்).
பின் வருபனவற்றை சர்ச் செய்ய கூறுபவையெல்லாம் ஆண்ட்ராய்டு மொபைலில் MARKET@ என்ற தனி MENU உள்ளது அதில் போய் செயல் படுத்தவும்.by என்று வருபவை ஒரே பெயரில் பல அப்பிளிகெசன் உள்ளது அதன் வடிவமைப்பாளர்கள் தெரிந்து சுலபமாக தேர்ந்தெடுக்கவே.
1.swype keypad
இது ஒரு கீ போர்டு வகை சாப்ட்வேர் ஆகும்.இதை நீங்கள் உங்கள்
ஆண்ட்ராய்டு மொபைலில் (மார்கெட்) என்ற applictionனில் போய் swype keyboad என்று சர்ச் கொடுத்து டவுன்லோடு செய்யவும்.சில மொபைலில் டிபால்ட்டாகவே டவுன்லோடு செய்து கொடுக்க பட்டுயிருக்கும்.
இதில் நீங்கள் டைப் செய்ய ஒவ்வொரு முறையும் தனிதனியாக விரலை தூக்கி வேர்டை அடிக்க தேவையில்லை.
நீங்கள் டைப் அடிக்க வேண்டிய எழுத்தின் மேலயே விரலில் வரைந்தாலே போதும் ,அதாவது ”answer” என்ற வார்த்தையை டைப் செய்ய ”A” என்ற எழுத்தில் ஆரம்பித்து கோடு கிழிப்பது போல் விரலை இழுத்து கொண்டே ”n,s,w,e,r வரைந்தாலே போதும் அதுவே முடிந்த வரை சரியான வார்த்தையை யூகித்து டைப் செய்து விடும்.
இதை உபயோகிக்க keyboard setting கில் swype modeக்கு மாற்றினாலே போதும் இனி வார்த்தையை டைப் செய்வது, சாரி கிறுக்குவது சுலபம்.
2.Flashlight
ப்ளாஸ் லெய்ட் - இந்த அப்பிளிகேசன் உங்கள் போனில் காமெராவுடன் ப்ளாஸ் லெய்ட் இருந்தால் மட்டுமே பயன் தரும்.இதுபெஸ்ட் application –னில் ஒன்று.வழக்கம் போல் இதை கூகுளின் ஆன்ராய்டு மார்கெட் application –னில் போய் சர்ச் கொடுத்து தேடவும்.அதில் பல flashlight application வரும் அதில் (Tiny Flash light by-Nikolay Ananiev) என்பதை தேர்ந்தெடுக்கவும் ,பெயர் மிக முக்கியம் .ஏன்னென்றால் இது பயன் படுத்த சுலபமாகவும்(ஒன் டச்) மற்றும் உள் மெனுவில் போலிஸ் லைட்,சிக்கனல் லைட்,கலர் பல்பு லைட் போன்றவை அடங்கியிருக்கும்.
இரவில் இந்த application –னை பயன் படுத்தி டார்ச் லைட்டாக பயன் படுத்தலாம்.
3.Hiden files
வழக்கம் போல் இதை கூகுளின் ஆன்ராய்டு மார்கெட் application –னில் போய் சர்ச் கொடுத்து தேடவும்.இதிலும் பல Hide Files application வரும் அதில்Hide files by beka என்பதை இன்ஸ்டால் செய்யவும்.முதலில் சொன்ன மாதிரியே பெயரை ஞாபகத்தில் வைக்கவும்.இதில் நாம் இரகசியமாக வைக்க வேண்டும் என நினைக்கும் புகைபடத்தையே,வீடியோவையோ,டாக்குமெண்ட் ஆகியவை ஃபோல்டர் வாரியாக தேர்ந்தெடுத்து அதை டிக் செய்தாலே போதும் டிக் செய்யபட்டவை மட்டும் மறைக்க பட்டு விடும்.
இந்த applicationனில் உள் நுழையும் போது பாஸ்வேர்டை கொடுத்தால் மட்டுமே மறைக்க பட்டதை பார்க்க முடியும்,மறைப்பை ஏற்படுத்த முடியும். பாஸ்வெர்டை மிக முக்கியமாக பாதுகாக்க வேண்டும். ஞாபகம் இல்லையெனில், பைல் கோவிந்த தான்.
4.calculator
கால்குலெட்டர் என இததெல்லாம் ஒரு ப்ரோகிராமுனு சொல்ல வந்துடாண்ட நினைக்காதிங்க ,மொபைல டீபால்ட கொடுக்க பட்டுஇருக்கும்.அதுல பசண்டேஞ் கணக்கு போட முடியாது, ஆப்சன் இருக்காது அதற்குதான் வரும் application, வழக்கம் போல் இதை கூகுளின் ஆன்ராய்டு மார்கெட் application –னில் போய் சர்ச் கொடுத்து தேடவும்.இதிலும் பல calculator appliction வழக்கம் போல் வரும் அதில்Basic calculator by Blissitec என்பதை இன்ஸ்டால் செய்யவும்.
மற்றும் தேடலில் பல கால்குலெட்டர் ,சயிண்ட்டிபிக் கால்குலெட்டரும் உள்ளது தெவையானதை தேர்ந்தெடித்து கொள்ளவும்.
5.Date calculator
இது நாட்களை கணக்கிட உதவும் கால்குலெட்டர் ஆகும்.வேண்டுபவர் மட்டும் தரவிரக்கி பயன் படுத்தி கொள்ளலாம்.மேலே சொன்ன முறையை பின்பற்றவும் கால்குலெட்டர் application பெயர்-Date calculator(Beta) by toshima66.
6.Jet vedio
ஜெட் வீடியொ இது ஒரு யூ-டியுப் ஒத்திசைவு கொண்ட ஒரு புரோகிராமாகும். யூ-டியுப் ஏற்கனவே டீபால்டாகவே இருக்கும்.அதில் வீடியோவை பார்த்தால் அதிக கொள்ளலவு M.P காழியாகும்.டவுன் லோடிங் நேரம்மும் அதிகம் ஆகும்.
இந்த ஜெட் வீடியோ குறைந்த mp கொள்ளலவு மட்டுமே நுகரும்,அதிக வேகமான டவுன்லோடிங் டைம்.வேண்டுமென்கிற பார்மெட்டில் 3gb,mp4,flu,mid range போன்ற வகையில் படம் கானலாம்.
நிச்சியமாக நல்ல அப்பிளிகெசன் இது.
இதை தரவிறக்க மேலே சொன்ன முறையை பின்பற்றவும் பைல் பெயர் jetVD – lite by jetAudio Inc.
6.Live wallpaper
நான் பரிந்துரைக்கும் ஒரு நல்ல வால்பேப்பர் இது ஆகும்.இந்த வால்பேப்பர் தண்ணீரில் மீன்கள் நீந்துவது போல் உங்கள் போனில் உள்ளே தண்ணீரை ஊற்றி மீனை நீந்தவிட்ட மாதிரி அசலாகவே தெரியும்.பார்க்க அருமையாக இருக்கும்.விரலை ஸ்கிரனை தடவ தண்ணீர் அழகாக ஆடும் பார்க்க உண்மையாக கூட தெரியலாம்.
இதனால் பேட்டரிதிறன் குறையலாம்.
இதை தரவிறக்க மேலே சொன்ன முறையை பின்பற்றவும் பைல் பெயர்- Koi free live wallpaper by kittehface software
7.Games
ஆண்ட்ராய்டு மொபைலில் டச் போனுக்குரிய அசதலான கேம்கள் பல உள்ளன அதில் சிறந்த விளையாட்டுகள் தேர்ந்தெடுத்து தருகிறேன்.விளையாண்டு பாருங்கள் விட மாற்றிகள்.அதில் குறிப்பிடும் வனவாக உள்ள
இதில் மூன்று வகையான சீசன்கள் உள்ளன அனைத்தையும் தரவிறக்கி விளையாடுங்கள் நன்றாக இருக்கும்.
8.Tiny compass
டினி காம்பஸ் இது திசை காட்டியாக செயல் படுகிறது. நன்கு செயல்படுகிறது.
தள முகவரி –Tiny compass by nikolay Ananiev
9.Tamil books
தமிழ் என்று கூகிள் மார்கெட்டில் சர்ச் செய்தால் தமிழ் நூல்கள் சில கிடைக்கின்றன.அவை
1.திருக்குறள் அதன் விளக்கத்துடன் புரியும் வண்ணம் உள்ளது.
2.திரு.ஜெயகாந்தனின் சிறுகதைகளும் உள்ளது.
3.ஆத்திசூடி அதன் விளக்கம்
விரைவில் இன்னும் பல வரும் என எதிர்பார்க்கலாம்.
10.How to Tie
கூகுளில் என்னதான் இல்லை என கேக்கும் அளவிற்கு அப்பிளிகெசன் ஏராளம், ஏராளம்.
இன்னும் சில பேருக்கு டை எப்படி கட்டுவது என்று கூட தெரிவது இல்லை. எனக்கே முதலில் தெரியாது.அவசரத்திற்கு முக்கியமான விழாக்களுக்கு போவது என்றால் அடுத்தவர்களின் தயவை நாட வேண்டும்.இதற்கும் கூட யாரோ ஒருவர் அப்பிளிகெசனை வடிவமைத்துள்ளார்.
இதில் எப்படி விதவிதமான டை ஸ்டைல் உள்ளது,எப்படி டை கட்டுவது என விளக்க படத்தோடு அருமையாகயுள்ளது.அனைவருக்கும் பயன்தரும்.
இன்னும்,இன்னும் எவ்வளவே உள்ளது பக்கம் பத்தாது…..
உங்களுக்கு பயன் அளித்து இருந்தால் இண்ட்லி மற்றும் தமிழ்10 ல் ஓட்டு போடவும்.இது என் உழைப்புக்கு,முயற்சிக்கு கிடைத்த கூலியாகும்.
உங்கள் கருத்துகள்,சந்தேகங்கள் தெரியப்படுத்தவும். தங்கள் வருகைக்கு என் நன்றி!
நல்லதொரு பகிர்வு
ReplyDeleteநல்ல, பயனுள்ள பதிவு நண்பா. பல தகவல்களை தந்துள்ளீர்கள். ஆனால் ஒரு சின்ன தவறு நேர்ந்து விட்டது. இன்டலியில் ஓட்டு போட முயன்றபோது எதோ கோளாறாகி உங்கள் பதிவு என்னுடைய திரட்டி பகுதியில் இணைந்து விட்டது. என் திரட்டி பகுதியிலிருந்து எப்படி உங்கள் பதிவை விடுவிப்பதென்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.
ReplyDeleteநல்ல தகவலை தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
ReplyDeleteபயனுள்ள நல்ல தகவல்கள் நண்பரே!
ReplyDeleteநல்ல இருக்கு ...ஒரு சந்தேகம் ...ஆண்டிரயிட் ல அப்ளிகேசன் தரவிரகினால் அது எக்ஸ்ட்ரா
ReplyDeleteமெமரி இல் (எஸ் டீ கார்டு) போய் உக்கார வைக்க என்ன பண்ணனுமுன்னு தெரியுமா ?
useful :)
ReplyDeleteநல்ல பயனுள்ள புதிய தகவல்கள்.பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி
ReplyDeletesuper
ReplyDeleteஅடட்டே சூப்பர்பா
ReplyDeleteஅருமையான விவரங்கள். நான் நோகியா மொபைல் வைத்திருக்கிறேன். அதில் இந்த ஓ.எஸ். போடமுடியுமா?
ReplyDeletesorry sir this is only for android
Deleteமிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
ReplyDeletesuper thank you very much
ReplyDeleteTHALIVAA SUPER PINNITINKA PONGA!! ITHU MALAITHOORAL ALLA KUTHALLA ARUVI.SUPERRRRRRRR
ReplyDeletevery nice
ReplyDeleteநான் இப்பொழுதுதான் ஆன்ராய்ட்டு மொபைல் வாங்கி இருக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் பதிவு, நன்றி.
ReplyDeleteதோழா நல்ல முயற்சி.. SWYPE இன்னும் ஆன்ராய்ட்டு மார்க்கெட்டிற்கு வரவில்லை. if you want swype go here swype.beta.com/android/get
ReplyDeleteபயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் நண்பா! லேட்டா படிச்சாலும் பயனுள்ளதாக உள்ளது.
ReplyDeleteஅருமையான பகிர்வு. தொடருங்கள் பாஸ்
ReplyDeletethanks
ReplyDeletethanks
ReplyDeleteபயனுள்ள தகவல் நண்பா நன்றி
ReplyDeletevery useful information friend please continue it....
ReplyDeleteமிக அருமையான பதிவு வாழ்துக்கள்
ReplyDelete