தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

25 October, 2011

தீபாவளிக்கு ஷாப்பிங்கு போரிங்களா...... ! இதை படிங்க முதல.........






தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம்தான். அதிலையும் குழந்தைகளாய் இருக்கும் போதுஅதுவும்,பள்ளி பருவத்தில் தீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம் பெரிய கொண்டாட்டம்தான்.
               இந்த ஒரு பண்டிகைக்கு மட்டுமே நம் நாட்டில் பல இலட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகுதென்ரால் அது மிகையில்லை.
  அப்படி நாம் பாடுபட்டு சேர்த்த,உழைத்த பணத்தை கொண்டு துணிமணிகள்,நகைகள்,பட்டாசு ,டிவி,எலட்ரிக்கள்,எலட்ரானிக்கள் குட்ஸ் போன்ற அதி முக்கியமாக வாங்குகின்றோம்.
அப்படி செலவு செய்யும் பணத்தை துண்டுவிலாமல் சரியாக பயன் படுத்தினாலே ஒரு பெரிய வேலை முடிந்த மாதிரிதான்.


சரி இந்த பதிவு எதற்கு என்றால் எப்படி தீபாவளி நேரத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.



  1. முதலில் வேலை உங்கள் வசதிக்கு தக்கபடியான சரியான ஒரு முன் பட்ஜெட்டை ரெடி பண்ணுங்கள் .
  2. யார் யாருக்கு என்னனென்ன டிசைன்,மாடல்,கடை,விலை என்பதை வீட்டில் இருந்து கிளம்பும் முன்னே முடிவெடுத்து கொள்ளுங்கள்.
  3. நாம் பொருள் வாங்க நினைக்கும்,விரும்பும் கடைக்கு செல்ல வேண்டிய பாதை,ரூட்,பார்க்கிங் ஏரியா ஆகியவற்றை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவைத்து பின் ஷாப்பிங் கிளம்பினால் தேவையேற்ற் அலைச்சல்களை அதிகம் குறைக்கலாம்.
  4. முக்கியமாக நமது வீட்டு பெண்கள்,குழந்தைகள் நகைகளை அதிகம் அணியாமல் ஷாப்பிங் செல்வது ரொம்ப நல்லது.
  5. பெரிய ஷாப்பிங் மால் அல்லது பெரிய ஜவுளிகடைக்கு போகும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரும்மாறு ஒரு பிளானை ரெடி செய்து விட்டு செல்லுங்கள் .இதனால் ஒருவரை ஒருவர் பின்பற்ற தவறினாலும் குறித்த இடத்திற்கு வந்துவிடுமாறு சொல்லிவிடலாம்.
  6. முடிந்த வரையில் பணத்தை கையிருப்பாகவே வைத்து கொள்ளுங்கள்.பந்தாவாக இருக்கும் என்று நினைத்து ATMகார்டு,கிரெடிட் கார்டு மூலம் பணம்செலுத்த வேண்டாம், இது மாதிரி பண்டிகை காலங்களில் தவிருங்கள்.
  7. கார்டு மூலம் பணம் செலுத்தும் போது வியாபார கூட்டத்தில் கார்டு விபரங்கள் உங்களுக்கு தெரியாமல் அபகரிக்க வாய்ப்புள்ளது.
  8. அல்லது உங்கள் கணக்கில் ஒரே பில்லுக்கு இரண்டு,மூன்று முறைகூட பணம் எடுக்க பட்டு இருக்கும்.
  9. வங்கியே பணத்தை எடுத்து விட்டு பொருள்வாங்கியதாக கணக்கில் கழிக்க பட்டு இருக்கும்.பின் போராடி வரவு வைக்க வேண்டிய நிலை வரும்.
  10. முடிந்த வரை உங்கள் வங்கி இருக்கும் இடத்தில் வங்கிசார்பு ATM களை பயன்படுத்துகள்.பிற வங்கி ATM களை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிருங்கள்
      1.  (ஏன் என்பதற்கான காரணம் அடுத்த பதிவில்)
    .அவசிய அவசர தேவைக்கு மட்டும் பிற ATMமை பயன்படுத்தவும்.
  11. பணத்தை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் பகிர்ந்து(பணத்தை பகுதியாக பிரித்து) கொள்ளுங்கள் .
  12. கைகுழந்தைக்கு தேவையற்ற வீண் ஆடம்பரமான துணிமணிகளை  வாங்காதீர்கள்.இதனால் எந்த பயனும் இல்லை.சில நாட்களிலே சைஸ் பொருந்தாவண்ணம் ஆகும்.
  13. ஷாப்பிங் போகும் போது கைகுழந்தைக்கு புசு புசு புசு போன்ற கவுனை,நைலான் துணிகளை தவிர்க்கவும்.காட்டன் துணிகளை அணிவிக்கலாம்.
  14. குழந்தைகளுக்கு தேவையற்ற செருப்பு,ஷு,தொப்பி,வாச்சு ,கண் கண்ணாடி போன்றவற்றை அணியாமல் இருங்கள்.மற்றும் டஜன் கணக்கில் டிரஸ்க்கு மேச்ச வாங்கினேன் என்று குப்பைகளை சுமக்காதீர்கள்.இது தெண்ட செலவு ஆகும்.என்ன குழந்தை இததெல்லாம் போட்டுகிட்டு நடந்துபோகவ போது....
  15. குழந்தைக்கு தேவையான பால்,தண்ணிர்,நாப்கின் தவறாமல் கொண்டு செல்லுங்கள்.
  16. நன்கு பெரிய கடையோ அல்லது அறிமுகமான கடைகளிலோ பொருட்களை வாங்குங்கள்.தெரியாத கடையில் பழைய சரக்கை விற்று தள்ளி விடும் வாய்ப்பு அதிகம்.
  17. கணவன் மார்களே எவ்வளவு பட்ஜெட் என்று முடிவு செய்த பின் கூடுதலாக ஒரு 20% பணம் வைத்துகொள்ளுவது நல்லது.இதை ஒரு போதும் வீட்டில் யாரிடமும் கூராமல் இருப்பது மிக நல்லது.சில நேரத்தில் உதவும்.
ஷாப்பிங் முடிந்த பின் தனியாக ஒரு வாடகை ஆம்னி அல்லது பிற கார்களையோ பயன் வீட்டிற்கு வந்து சேருங்கள்.காசை மிச்சம் பண்ணும் பேர்வழினு பஸ்லயோ,ஆட்டாவிலோ வருவது இட நெருக்கடியும்,மன நிம்மதியையும்,பொருட்களையும் தவற விடும் வாய்ப்பாக அமையும்.

    அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள் !

    பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

    4 comments:

    1. நீங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் உங்கள் வேகத்தை என்னால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. தீபாவளிக்கு இன்னும் முழுதாக 12 மணிநேரம் இருக்கும் போதே இப்படி ஒரு பதிவு எழுதி அசத்தி விட்டீர்களே.
      உங்கள் அடுத்த பதிவான கிருஸ்த்மஸ் ஷாபிங் எச்சரிக்கையை டிசம்பர் 24 அன்றே எதிர்பார்கிறேன், தொடரட்டும் உங்கள் சேவை.
      தப்பா நினைக்காதீங்க சும்மா ஜாலிக்கு உங்கள் எச்சரிக்கை உண்மையில் பயனுள்ளதாகவே இருக்கிறது

      ReplyDelete
    2. எல்லாம் சரிதான், காசு எங்கேயிருந்து வரும் என்பதைச் சொல்ல மறந்திட்டீங்களே, சார்?

      ReplyDelete
    3. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

      ReplyDelete

    Related Posts Plugin for WordPress, Blogger...