தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

31 January, 2012

புதிய பஜாஜ் பல்சர் 200 NS ( pulsar 200NS) விபரங்கள் மற்றும் வீடியோவுடன்

இன்றைய இளைஞர்களை கவரும் வண்ணம் பல முன்னனி நிறுவனங்களும் பல பல ஆராய்ச்சி செய்து அவர்களின் எண்ண ஓட்டபடி பொருட்களை தயாரித்து வழங்கி தங்களை முன்னனி படுத்தி கொள்ளுகிறார்கள்.

அந்த வகையில் இரு சக்கர வாகனம் தயாரிப்பு முன்னனி நிருவனமான பஜாஜ் ,ஒரு புத்தம் புதிய ஆனால் பழைய புயழை பல வகை மாற்றங்களை ஏற்படுத்தி சிறிது வலுசேர்த்து தானே புயல் ரேஜ்சுக்கு களத்தில் இறக்கியிருக்கும் இரண்டு கால் புயல் தான் பஜாஜ் பல்சர் 200 என் எஸ் .சரி சரி பில்டப் போதும் ,மேட்டருக்கு போவோம்மா !


இந்த பைக்கோட குண நலன பார்க்கலாமா !


1.புதிய பல்சர் 200NS பேருலயே இதோட பவர் என்னானு சொல்ல வேண்டியது இல்லைனு நினைக்கிறேன்,அதாவதுங்க 200சி சி பவர் கொண்டதுங்க

2.இது 0-லிருந்து 60 கி.மீ வேகத்த 3.61 வினாடி மட்டுமே எடுத்துகுதுங்க (என்னனன ஸ்பீடு)3.இதோட அதிக பச்ச பறக்கும் சக்தி மணிக்கு 136 கி.மீ போதுமாப்பா.

4.இந்த வேகத்துல போரியே தம்பி ,எவனாவது புஸ்ஸ்சுக்குனு குறுக்கால வந்து பய முடுதினான என்ன செய்றது அதுக்குதான் நமக்கு பஜாஜ் வண்டில முன்னாடி,பின்னாடி டிஸ்கு (disk)பிரேக்கு கொடுத்துருக்கு அத ஒரு அமுக்கு அமுக்குனா போது வண்டி க்ரீச்சுனு நின்னிடும்

5.ஒன்னு வச்சே ஏன் நீ கஷ்ட படனும் பஜாஜ் இரண்ட தந்துச்சு,அதுவும் எவனோ பத்தானு போன் போட்டு சொல்லவும் பஜாஜ் இப்ப மூன கொடுத்துருக்கு அட ஸ்பார்க் பிளக்கதான் சொன்னேன் நம்புங்க .கேட்ட புதிய டெக்னாலஜினு சொல்ராங்கே பார்போம் எப்படி வேலை செய்துனு.

6. 4வால்வு கொடுத்துருக்காங்கப்ப...

7. ஸ்டீல் பிரிமீட்டர் என்ற ப்ரேம்ல வடிவமைச்சு இருக்காங்க ,அதுனால பில்டிங் ஸ்டாங்கு.

8.வழக்கமான கேள்வி இரண்ட எப்போது கேட்போமே அது என்னானு சொல்லுங்க பார்ப்போம்
இது தமிழனோட தேசிய குணமானு தெரியலை எம்மா பெரிய வண்டியானலும் சரி ராக்கெட்டே கண்டுபிடிச்சாலும் முத கேள்வி அது என்ன விலைப்பா ? எவ்வளவு மைலேஜ் தரும்னு கேக்கறதுதான்
சரி இதோட மைலேஜ் 55-60 வரை இது கம்பெனி சொன்னது, உண்மையான மைலேஜ் கான நாம தான் காசு போட்டு வாங்கி ஓட்டி பார்த்து முடிவு சொல்லனும்.

9. அப்ப இதோட விலை 75,000லிருந்து90,000 வரை குள் இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.


10. 6 ஆறு கியர் கொண்டத வடிவமைக்க பட்டுயிருக்கு

11.இதோட பெட்ரோல் டேங்கு 12லி புடிக்கும் நல்ல ரொப்பலாம்.

12. வண்டி கீ.கிரவுண்டு அதாவது பெரிய ஸ்பீடு ப்ரேக்க்ர்ல அடி மட்ட பாடி உரசாமல் இருக்க வண்டியை பேஸ்ஸை உயர்த்தி வச்சுயிருப்பாக்க அதான் 167mm13.வண்டி முன் பக்க பிரேக்கு 280mm டிஸ்க்,பின்னாடி 230mm டிஸ்க்

14. முன் பக்கம் டெலிகோபிக் சஸ்பென்ஸன்,பின்னாடி நைட்ரோ மொனொ கேஸ் சாக்கப்ஸர்.

15. வீல் பேஸ் 1363mm அதாவது இது இரண்டு டயர்ருக்கும் இடையில் உள்ள இடைவெளியாகும்.

16.பல்சர் மொத்த எடை 145கிலோ.

17.முன் டயர் 100/80 R17 பின் டயர் 130/70 R17

வீடியோ இணைப்பு இந்த எழுத்தின் மேல் கிளிக் செய்க

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

 1. பதிவு அருமை..
  என் தளத்திற்கு வந்தமைக்கும் படித்து இணைந்தமைக்கும்..நன்றி..நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி !உழவன் ராஜா

   Delete
 2. ஏனுங்க, எனக்கு வயசு 78 தான் ஆகுது. இந்த பைக் எனக்குப் பொருத்தமா இருக்குமுங்களா?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ! ஐயா

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...