தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

27 March, 2012

நீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா ? தொகுதி - 2

நாம இப்ப அடுத்த பகுதில பார்க்க போவது பல புதிய அப்பளிகேஷன் அல்லது ஏற்கனவே நீங்க கேள்வி பட்டதாக இருக்கலாம் அல்லது உபயோகப் படுத்தியிருக்கலாம் .எனக்கு தற்போது நேரம் கிடைத்தமையால் பதிவிடுகிறேன்.


1.தினமலர்:(dinamalar)
ஆண்ட்ராய்ட் மொபைலில் தின மலர்
நாம் காலையில எழுந்தவுடன் பார்க்கும் முக்கியமான விஷயம் செய்தி படிப்பது.நாட்டு நலவரத்தை கவனிப்பது அன்றாடும் வேலையாக வைத்து இருப்பது நமக்கு பொழுது போக்கு.அதை நமது மொபைலில் மூலம் பைசா செலவுயில்லாமல் பார்ப்பது நவீன உலகத்தின் வளர்ச்சி.அதை நமது ஆண்ட்ராய்டு மொபைலில் market (தற்போது play store) என்ற மெனுவில் dinamalar என சர்ச் செய்தால் வந்து விடும்.எல்லா ஊர் பதிப்பும் தனி,தனியாக பார்யிடும் வசதியும் உள்ளது.
ஆன்ராய்டு மார்கெட்டில்(பிலை ஸ்டோர்) dinakaran,maalai malar,vikatan (தினகரன்,மாலை மலர்,விகடன்) போன்ற பிற தினசரிகள் கிடைக்கின்றன.
மொபைலில் விகடன்


மொபைலில் தினகரன்




2.ரிங்ராய்டு(Ringdroid)
மொபைலில் ரிங்டோன் கட்டர்
நமது மொபைலில் உள்ள mp3 பாடலை ரிங்டோனாக வைத்து கொள்ள தேவையான பகுதியை மட்டும் கட் செய்து சேவ் செய்து அதனை பயன் படுத்த இந்த அப்பிளிகேஷன் உதவுகிறது.இனி நாம் கணினியை தேடி செல்ல வேண்டாம்.நமக்கு பிடித்த பாட்டின் தொடக்க இசை அல்லது இடையில் உள்ள பாடல் வரிகளை விருப்பம் போல் கட் செய்து காலர் டியூனாக பயன் படுத்தலாம்.

3.ஸ்டேட் ஃபேங்க் ஃப்ரீடம்(state bank freedom)

தாங்கள் ஸ்டேட் ஃபேங்க் வாடிக்கையாளர் என்றால் உங்களுக்காவே வடிவமைக்க பட்ட அப்பிளிகேஷன்தான் (state bank freedom) . இதில் தங்களுடைய மொபைலை ரீசார்ச் செய்யலாம்,பில் பேமெண்டுகளை கட்டலாம்,டீமேட் கணக்கு வரவு,செலவுகளை பார்க்கலாம்,தங்களுடைய கோரிக்கை நிலவரத்தை கானலாம்.
இதே போல் பல நிதி நிறுவனங்களும் தங்கள் அப்பிளிகேஷனை வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளன.அவை
ஐசிஐசிஐ.ஆந்திரா பேங்க்,ஹச்சிடி.ஃப்சி ,ஃபேங் ஆப் பரோடா,யூனியன் பேங்க் யூனிடட் பேங்க்,கனரா,தேனா,அலகாபாத்போன்றவையும் கலத்தில் உள்ளன.

4.புதிய ஆங்கிரி பேர்ட் ஸ்பேஸ்(Angry birds space )

ஆக்கிரி ஃபேர்ட் ஸ்பேஸ் ஆனந்தமாக விளையாட
ஆங்கிரி பேர்ட் விளையாட்டில் புதுய வரவாக வந்து உள்ளதுதான் ஆங்கிரி பேர்ட் ஸ்பேஸ்(Angry birds space ) இது விண்வெளியை மையமாக கொண்டு வடிவமைக்க பட்டுள்ளது.மிதக்கும் பன்றிகளையும்,கட்டங்களையும் உடைக்கும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.இது மார்ச்22 அன்று தான் வெளியிடப்பட்டது.இதன் டவுன் லோடு கொள்ளலவு 23MB ஆகும்.இதுவரை இந்த புதிய விளையாட்டை 72,000பேர் பதிந்துள்ளனர்.

பின் குறிப்பு:
தற்போது நீங்கள் கூகிள் கணக்கில் நுழைந்தவுடன் கூகிள் மெயின் ஃபேஜ்ஜில் மேலே புதிதாக play new என்ற மெனு கானப் படும். இதில் சென்றால் ஆண்ட்ராய்டு பிளை ஸ்டேருக்கு அழைத்து செல்ல படுவீர்கள்.நீங்கள் எந்த ஜிமெயில் கணக்கு மூலம் ஆண்ட்ராய்டு மொபைலில் கணக்கு ஏற்படுத்தி அப்பிளிகேஷனை பதிவு செய்கிறீர்களோ அந்த கணக்கை பயன் படுத்தி play new வில் நுழைந்து தேவையான அப்பிளிகேஷனை தரவிரக்கம் செய்யலாம்.உங்கள் மொபைலில் இண்டர்னெட் இணைப்பு செயலில் இருந்தால் அது தானகவே தரவிறக்கம் நடைபெற ஆரம்பித்துவிடும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றி கோவை சார்

      Delete
  2. தகவலுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நன்பர் பாஸித் அவர்களே

      Delete
  3. உங்கள் தொழில் நுட்பத் திறமை என்னை மலைக்க வைக்கிறது.

    ReplyDelete
  4. My blog has replaced the google showbox app that allows people to watch entertaining movies wherever you are at the chrome store.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...