தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

13 October, 2013

ராமையா வஸ்தாவையா திரை விமர்சனம்

ராமையா வஸ்தாவையா தெலுங்கு பட விமர்சனம்(Ramayya_Vasthavayya movie review)

 நம்ம ஜீனியர்  NTR  நடிச்ச படம். நமக்கு  ஜீனியர் என்.டி.ஆர்  டான்ஸ் ஆடும் ஸ்டையில்  பிடிக்கும் என்பதால் படம் பார்க்கலாம் என்  ஒரு ஈர்ப்பு.

தமிழ் நாட்டுல விஜய் எப்படியோ அது போல் தெலுங்குல NTR. நடிகரு ஸ்டெப் போட ஆரம்பிச்சு டாருனா ,சும்மா சகுட்டு மேனிக்கு போடுவாரு தாளம் மாறாமல் அப்படியொரு டான்ஸ். பாட்டு மீயுசிக்கும் இவர் ஸ்டெப்பும் கரேட்டா வரும்.


இவரு இதுக்கு முன்னாடி நடிச்ச பாட்ஷா(தெலுங்கு)  படம் பாட்டும் டான்ஸ்சும் சூப்ப்ர்ரா இருந்துச்சு.அந்த படம் செகண்ட் ஆப் தான் நல்லா இருந்துச்சு.அந்த படம் தந்த எண்டர்டைமெண்ட்  பார்த்து ராமையா வஸ்தாவையா படத்துக்கு போனேன்.

படம் பார்க்கலாமுன் பார்த்தா அது திருச்சியில விஜய் மல்டிபெக்ஸ் சினிமாவில் மட்டும்தான் ரிலீஸ்.அங்க போனா எப்பவும் 120/- க்கு விற்கிற டிக்கெட் இன்னைக்கீன்னு பார்த்து 150/- ஓவாய்.எதுக்குங்க கூட விலை விற்கிறீங்கனு கேட்டா தெலுங்கு படம் அதுனால தான்இவ்வளவு விளக்கம்.

தெலுங்கு படம் பார்த்து நம்ம தான் புரிச்சுக்க அதிகம் முயர்ச்சி செய்யனும் அதுக்கு எதுக்கு இவங்களுக்கு காசு கொடுக்கனுமுன்னு மூளையில ஒரு யோசனை.

சரி கதைக்கு வரேன். நம்ம jn,NTR  படம்  தொடங்கியதும் ஒரு பைட்டு அடுத்து ஒரு பாட்டு. ஹிரோ சமந்தாவை லவ் பண்ணுகிரார்.முதலில் வழக்கமா எல்லா  ஹிரோயினும் செய்ர மாதிரி பிகு பண்ணி பிறகு லவ் செய்கிறார்.

அப்பறம் தன் வீட்டு  கல்யாண விஷேசதிற்கு ஹீரோவை அலைச்சிட்டு  போறங்க போன இடத்துல கல்யாண முடிச்ச பிறகு சம்ந்தா வின் அப்பா மற்றும் அவர்கூட இருக்கிறவர் எல்லோரையும் கொலை பண்ணுகிறார் நம்ம ஹீரோ. சம்ந்தாவை பிளான் போட்டு காதலிக்கிற மாதிரி நடிச்சு ஒன் ஆப்தி வில்லனான அவங்க அப்பாவை கொல்ல சதின்னு நமக்கு தெரிய வருகிறது

அதோட இடைவெளி

அப்பறம் ஏன் இவங்களை கொலை செச்சாருனு  இன்னும் யார்யாரை கொலை செய்ய போரார்னு சமந்தாகிட்ட தன் சோக கதையை எடுத்து விடுறாரு.

இப்ப எண்டர் ஆவுராங்க 2வது ஹீரோயின் ஸ்ருதிகமல்ஹாசன்
இவரு தன் கிராமத்திற்காக ஏழை மாணவர்களுக்கு கல்வி சொல்லி கொடுப்பது மற்றும்
கிராமத்திற்காக போராடுவது என  சேவை செய்கிறார்.
அப்ப ஜீனியர் என்.டி.ஆர் ஸ்ருதியை காதலிக்கிறார்.
அப்பறம் வில்லன் குரூப்  ஒன்னு அந்தகிராமத்துல  ஃபேக்டரி  கட்ட பூஜை போடுது ஊர் மக்களுடன் ஸ்ருதி போய் போராடுது. அப்ப ஸ்ருதியை பார்த்த வில்லன் அவர் அழகுல மயங்கி பில்டிங் கட்டுரத ஒத்தி வச்சு ஊர் மக்களை போக சொல்லிராரு.

அப்பறம் ஸ்ருதி வீட்டு போய் ரகளை பண்ணி அவர வலுகட்டமாக கார்ல தூக்கிட்டு போராரு வில்லன். அப்ப ஹீரோ கார்லேயே போய் லெப்ப்டுல இண்டிகேட்டர்  போட்டு ரைட்டுல வண்டிய  ஏர்ல பாஸ் பண்ணி வில்லன் குரூப் வண்டிய அந்தர் பல்ட்டி அடுச்சு பல கிலோ மீட்டர் தூரத்துல தன் வண்டியிலமுட்டி தூக்கி வீசுறாரு.வில்லன அடிச்சு போட்டுட்டு மிரட்டிட்டு  ஸ்ருதியை கூட்டிகிட்டு வந்திறாரு.

அப்பறம் ஸ்ருதிக்கும் என்.டி.ஆருக்கும் கல்யாணம் ஏற்பாடு நடக்குது அந்த நேரத்துல அடிபட்ட வில்லன் குரூப் என்,டி,ஆர் குடும்பத்தையும் ,ஸ்ருதிஹாசனையும் கொலை செய்ராங்க .இனிமேல் உங்களுக்கே எல்லாம் தெரிச்சுருக்கும் நினைக்கிறேன்.


கதையை படிக்கும் உங்களுக்கே தூக்கம் வருதே எனக்கு எப்படி இருந்து இருக்கும்.அப்படியே ஆதி படத்தில கொஞ்சம்கதையை உருவி மசால கலந்து புது பெயரோடு வந்துருக்கு

ராமையா வஸ்தாவையா - நி வரவே வேண்டாம்யா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

 1. How Ntr selected this story? anyway good review. Thanks

  ReplyDelete
 2. நல்லதொரு விமர்சனம்.. அருமை.. அருமை..!

  இன்று என்னுடைய வலைத்த்ளத்தில்:


  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...